தேனுண்ணும் வண்டுவந்து தீண்டியது பூக்களையே - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
தேனுண்ணும் வண்டுவந்து தீண்டியது பூக்களையே;
ஆனந்தம் மேவிட அங்கிங்கும் – ஞானக்கண்
கொண்டதுபோல் ஆரவாரங் கொள்ளாமல் நேர்நின்று
செண்டாட்டம் ஆடியது சேர்ந்து!
– வ.க.கன்னியப்பன்
*பாக்களுக்கு அழகு சேர்ப்பது இலக்கணம் மட்டுமல்ல; பாடலின் பொருளும், தகுந்த சொற்களும் எதுகை, மோனையுமே! சொற்களை வகையுளி செய்வதையும் முடிந்தவரை விலக்கலாம்;
1, 3 சீர்களில் மோனை (பொழிப்பு மோனை) அமைவது பாடல் மேலும் சிறக்கும். மேலேயுள்ள பாடலில் ஒவ்வொரு அடியையும் வாசித்துப் பாருங்கள்; இனிக்கிறதா இல்லையா சொல்லுங்கள்!