பிறப்பதன் காரணம் இறப்பதற்கே
பிறப்பதன் நிச்சயமான காரணம் இறப்பதற்கே
இருப்பதன் கண்டிப்பான காரணம் வாழ்வதற்கே
படிப்பதின் உண்மையான காரணம் உழைப்பதற்கே
உழைப்பதன் அடிப்படையான காரணம் பிழைப்பதற்கே
உண்பதின் உருப்படியான காரணம் நாவு சுவைப்பதற்கே
இளமை துடிப்பின் உலகறிந்த காரணம் அனுபவிப்பதற்கே
திருமணத்தின் உள்ளடங்கிய காரணம் காம சுகத்திற்கே
பணம் தேட இயல்பான காரணம் வயிறார உண்பதற்கே
புகழ் தேடுதலின் மூலகாரணம் இறுமாப்புகொள்வதற்கே
அரசியலில் ஈடுபட காரணம் பணம் பதவி பெறுவதற்கே
சமூக சேவை செய்ய காரணம் புண்ணியம் பெறுவதற்கே
வாழ்வில் வெற்றிபெற காரணம் தோல்வி அடைவதற்கே
வாழ்வில் தோல்வியுற காரணம் வெற்றி பெறுவதற்கே
இவற்றை நீங்கள் படிக்க காரணம் சக்தி பெறுவதற்கே
நான் இதை எழுத காரணம் நானும் சக்தி பெறுவதற்கே!