எட்டாத வானம் கூட வாசல் படிதான் 555

***எட்டாத வானம் கூட வாசல் படிதான் 555 ***
வாழ்க்கை...
எல்லாவற்றையும் இழந்து விட்டோம்
என்று நினைக்காதீர்கள்...
எதிர்காலம்
என்று ஒன்று உள்ளது...
சில ஏமாற்றங்கள்தான்
வாழ்க்கையின் புதியபாதை...
தடைகள் தாண்டி
ஓடிக்கொண்டு இருந்தால்...
காலுக்கு கீழே இருக்கும்
முட்கள் தெரிவதில்லை...
கண்ணுக்கு எதிரே காத்திருக்கு
இலக்குகள் மட்டுமே தெரியும்...
வாழ்க்கை
எதார்த்தமான ஓட்டம் அல்ல...
மாரத்தான் போல தொடர்
ஓட்டம் ஓடிக்கொண்டே இரு...
வாழ்க்கை சுமைகளை
சுமந்து கொண்டு ஓடுபவனுக்கு...
எட்டாத வானம் கூட
வாசல் படியாக மாறும்...
வாழ்க்கை ஒரு
வட்டமாக இருக்கலாம்...
வட்டம்தான் நம் வாழ்க்கை
என்று நினைத்துவிடாதீர்கள்...
கைபேசி
சிறிதாக இருந்தாலும்...
ஆயிரமாயிரம் தகவல்களை
சேமித்து கொண்டு இருக்கிறது...
வாழ்க்கையும் அப்படிதான் தகவல்கள்
குறைவானதாக இருந்தாலும்...
முடிவுகள் சரியானதாக இருக்கும்
ஒரு கலைதான் வாழ்க்கை.....
***முதல்பூ.பெ.மணி.....***