பிற்பகல் விளையும்

கொல்லையில் கிடந்த
ஓட்டைச் சட்டியை
கழுவி வைத்ததையும் ,
கிழிந்த வேட்டியை துவைத்து
காய வைத்த மகனைக்
கண்டு திகைத்தத் தந்தை

மன மகிழ்ந்து
மகனை அழைத்து
எந்த வேலையும்
செய்யாத நீ--இன்று
இப்படி செய்ய
என்ன காரணமென்றார்

அதற்கு மகன் சொன்னான்
“ அன்று தாத்தாவிற்கு
ஓட்டை சட்டியில் தானே
உணவு தந்தீர்கள்—கிழிந்த
வேட்டியைத் தானே
உடுத்த கொடுத்தீர்கள்

நீங்கள் தாத்தாவானால்
உங்களுக்குக் கொடுக்கத்தான்
எடுத்து பத்திரப்படுத்தி
வைத்தேனென்றான் “
தந்தையோ மயங்கி விழுந்தார்
முற்பகல் செய்யின்
பிற்பகல் விளையும்.

எழுதியவர் : கோ. கணபதி. (24-Jun-22, 12:48 pm)
சேர்த்தது : கோ.கணபதி
Tanglish : pirpakal vilaiyum
பார்வை : 47

மேலே