கஞ்சா போதை

என்னடா ஆள் நடமாட்டம் இல்லாத இந்த காட்டுப் பகுதில் காவல் ஆய்வாளர், துணை ஆய்வாளர், காவலர்கள் அஞ்சு பேரு தள்ளாடி, சிரிச்சிட்டு திரியறாங்க.

பாவம்டா. நேர்மையான அதிகாரிங்க. ஒரு ரவுடிகிட்ட இருந்து பத்துக் கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செஞ்சாங்க. ரவுடி தப்பிச்சு ஓடிட்டான். ஆய்வாளர் பிடிபட்ட கஞ்சாவை கீழே கொட்டி தீ வச்சு எரிக்கச் சொன்னாரு‌.

அப்பறம்?

கஞ்சா எரியும் போது வெளிவந்த புகை இவுங்க மூக்குல ஏறிடுச்சு. எல்லாருக்கும் கஞ்சா போதை. போதை தெளியற வரைக்கும் இங்கதான் சுத்திட்டு திரியுவாங்க. யாராவது இதை செல்பேசில படம் பிடிச்சு சமூக வலைத்தளங்களில் போட்டா காவல் துறைக்கே கெட்ட பேரு ஆயிடும். விசாரணை நடத்தி உண்மையைத் தெரியப்படுத்தினால் தான் இவுங்க இடைநீக்கத்தை விலக்கு வாங்க.

எழுதியவர் : மலர் (27-Jun-22, 9:30 am)
சேர்த்தது : மலர்1991
பார்வை : 129

மேலே