கர்லா தர்லா

கர்லா, தர்லா அங்கெல்லாம் போகக்கூடாது. இங்க வாங்க.

ஏன்டி சுவ்வேதா, அமெரிக்காக்காரி யாருடி இந்த கர்லா வரும் தர்லாவும்.

என்னோட இரட்டைப் பொண்ணுங்க பாட்டி.
இரண்டு வயசு ஆகுது.

அது சரி. ஒரு பொண்ணு 'கர்லா'. அவ கர்லாக் கட்டை‌ சுத்தறவளா? இன்னொருத்தி தர்லா. எதையும் யாருக்கும் தரமாட்டாளா? என்ன பேருங்கடி?

பாட்டி பெத்த பிள்ளைங்களுக்கு தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைகளுக்கு தமிழ்ப் பேருங்கள வைக்காம இந்தி பேரையோ அல்லது வேறு மொழிப் பேரையோ வைக்கிறதுதான் நாகரிகம். எங்க பொண்ணுங்க பேருங்களை எல்லோரும் "அருமையான பேருங்க. ஸ்வீட் நேம்ஸ்"னு சொல்லறாங்க.

#####################################
Karla = Womanly. Norwegian, French, German, English and Indian origin

Tarla = Nectar. Feminine name. Indian origin.

எழுதியவர் : மலர் (27-Jun-22, 6:50 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 39

மேலே