இரத்த சொந்த பிரிவினை 555

***இரத்த சொந்த பிரிவினை 555 ***



பா[ச]கப்பிரிவினை...


சந்தோசமாக வாழ காசுபணம்
தேவையில்லை என்று நினைத்தேன்...

அண்ணன்
உன்
மீது பாசம் வைத்தேன்...

தம்பி உன்மீது
இரக்கம் காட்டினேன்...

பாசம் வைத்ததால்
பகையாக பார்க்கிறீர்கள்...

இரக்க
ம் காட்டியதால்
ஏளனமாக பார்க்கிறாய்...

யார்கிட்டேயும் எதுக்காகவும்
விட்டு கொடுத்ததில்லை உங்களை...

நீங்களோ
பாச[க]ப்பிரிவினை பார்க்கிறீர்கள்...

நீங்கள் அல்லி கொடுக்க
வேண்டாம்
பாசத்தை...

என் பாசத்தை
உணர்ந்தாள் போதும்...

நீங்கள் விட்டு
கொடுக்க வேண்டாம்...

இருப்பதை கொடுத்தால்
போதும் பாகப்பிரிவினையை...

வெளித்தோற்றமே இல்லாமல்
வளர்ந்து நிற்கிறது பகைமை...

நான் சோர்ந்து
நிற்கும் போதெல்லாம்...

தோள்கொடுத்து தட்டி
கொடுக்கும் மனைவியான தோழியும்...

அடியெடுத்து
வைக்கும் போதெல்லாம்...

ஊன்றுகோலாய் பக்கமிருக்கும்
பிள்ளைகளும் இருக்கும் நான்...

கோடீஸ்வரன் தான்...

வசந்த காலத்திற்கு முன் வரும்
இலையுதிர் காலம் போல...

இந்த பாகப்பிரிவினை உங்கள்

உள்ளங்களை காட்டிவிட்டது...

எனக்கு இனி வரப்போகும்
நாட்கள் ஒவ்வொன்றும்...

பேரின்ப
வசந்த காலம்தான்...

என் வாழ்வில்
அன்பு சகோதரர்களே.....


***முதல்பூ .பெ.மணி
.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (30-Jun-22, 9:10 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1071

மேலே