பாசவலை
சிலந்தி வலை
பார்ப்பதற்கு அழகுதான்
ஆனால் அதில் சிக்கிய
பூச்சிக்குதான் தெரியும்
வெளியேற முடியாமல்
தவிக்கும் தவிப்பு....!!
அதுபோல்தான்
மனிதர்களில் பலர்
பாசவலைக்குள் சிக்கி
கூட்டுப்புழுவை போல்
வெளியேற முடியாமல்
தவித்து துடிக்கின்றர்கள்...!!
--கோவை சுபா