உணவு பந்தி

உணவு பந்தி

பெரிய விழாவாக
இருக்க வேண்டும்
எங்கும் ஆடம்பரம்
வெளிச்சத்தை அள்ளி
வீசும் மின் வெளிச்ச
புள்ளிகள்

வரிசையாய் அடுக்கி
வைத்திருந்தது
வகை வகையான
உணவு வகைகள்

பரிமாற மட்டும்
பத்திருபது பேர்

வரிசையாய் சென்று
தட்டை ஏந்தி
வேண்டியதை பெற்று
சாப்பிட்டு சென்று
கொண்டே இருந்தார்கள்

பரிமாறுபவர்கள் மட்டும்
பசியுடன் காத்திருக்கிறார்கள்

இந்த பந்தி
எப்பொழுது முடியும்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Jul-22, 1:25 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : unavu banthi
பார்வை : 113

மேலே