என் கல்லறையில் நம் காதல்கள் கொஞ்சட்டும்
நீ பிரிந்தாலும் பரவாயில்லை,
உன்னிடத்தில் இருக்கும் என்
காதலைத் தந்துவிட்டு போ...
என்னிடத்தில் இருக்கும் உன்
காதலோடு அதை சேர்த்து,
நம் காதல்களின் கொஞ்சல் சத்தம்
கேட்டுக்கொண்டே என் கல்லறையில்
ஆனந்தமாய் உறங்குவேன்...