கண்ணீரும் பரிசாக எனக்கு இன்று 555
***கண்ணீரும் பரிசாக எனக்கு இன்று 555 ***
உயிரானவளே...
நான் இறக்கும்வரை
உன்னை மட்டுமே...
காதலித்து
கொண்டு இருப்பேன்...
உன்னோடு வாழ
துடிக்கும் என் இதயத்தை...
நீ புரிந்து
கொண்டது அவ்ளோதானா...
காலம் உனக்கு
உணர்த்தும் கண்மணி...
விதியிடம்
சொல்லி இருக்கிறேன்...
நம் பந்தம்
மறுஜென்மமும் தொடரும் என்று...
உன் முகத்தை
பார்க்க வேண்டும்...
இனி எப்போது
முடியும் என்னுயிரே...
நான் உன்னுடன்
கைகோர்த்து செல்லவும்...
உன்னுடன்
தினம் தினம் பேசவும்...
எனக்கு துணையாக
இருப்பது கனவுகள்தான்...
யாருக்கு பொய்யோ எனக்கு
மட்டும் உண்மை கனவு...
எங்கிருந்தோ வந்து அன்பை
தந்து சென்றுவிட்டாய் நீ...
கண்ணீரும்
பரிசாக இன்று எனக்கு...
உன்
காதோர மச்சத்தை...
தொட்டு தொட்டு
பார்க்கும் ஜிமிக்கியும்...
எனக்காக நீ
வைத்துக்கொண்ட தீ வடுவையும்...
இனி நான் எப்போது
பார்ப்பேன் என்னுயிரே...
உனக்காக காத்திருக்கிறேன்
வந்துவிடடி சீக்கிரம்...
உன்
உயிரை வதைக்காதே.....
***முதல்பூ .பெ .மணி.....***