வாழ்வில் பேரின்ப எல்லை
என் எண்ணமாய் உன்னுள் என்னை
ஏற்றாய் உன்னுள் நானாய் நீ இயங்க
என்னுள் நீயாய் உன்னை ஏற்று
நீயாய் நான் இயங்க இருவரும்
ஒருவராய் நாம் இயங்க ஈருடல்
ஓருயிர் ஆனோம் நாம் வாழ்வில்
நமக்குள் பிரிவில்லை பேதம் இல்லை
இதுவல்லவோ வாழ்வில் பேரின்ப எல்லை