வீரனே வெற்றி உனதே

நாம் மாய்ந்தால், பிரபஞ்சம் மாய்ந்திடுமோ?
ஆகாயம் வீழ்ந்திடுமோ?
ஆழி அலை நின்றிடுமோ?
மழை பொழியாதோ கருமேகம்?
கடல் சேராதோ பெருநதியும் ?
நம் பிறப்பு, நம் இறப்பிலே முடியும்.
உயிரனைத்தும் நம்மோடு அழிந்து போகுமோ?
இறக்கும்வரை வாழ வேண்டும்.
அதற்குள் இலட்சியம் அடைய வேண்டும்.
நீ உயிரோடு இருக்கும்வரை
உன்னை மரணம் தீண்டாது.
மரணமே நெருங்க அஞ்சும் வீரனே!
வாழ்க்கையில் அஞ்சி சாகலாமா?
நிமிர்ந்து நில், உலகைப் பார்.
வீர நடை போடு! வெற்றி உனதே!!!

எழுதியவர் : மனுநீதி (4-Jul-22, 3:19 am)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 55

மேலே