ஹை ஹீல்ஸ் செருப்பு

ஏ புள்ள! இந்த செருப்பை பாரு,
நல்ல ஒசரமா இருக்கு, வாங்கிக்கோ!
உன் தேய்ஞ்சுபோன செருப்புல, நெருஞ்சிமுள்
குத்துனாலே மேல வந்து காலுல எறுது,
முள்ளு வெட்டுறப்போ போட்டுக்கலாம்.
இந்த செருப்புல ரெண்டு இஞ்ஜி
ஆணி கூட மேல வராது.

ஆமா மாமோவ்! என்னாவொன்னு
காட்டுக்குள்ள போறப்போ கால் பொரட்டிப்புடும்
இதெல்லாம் நம்ம காலுக்கு சரிவராது...
அங்க பாருங்க மாமோவ் அந்த
பட்டணத்துப் பொண்ணுங்க இந்த
செருப்பை வாங்கிட்டு, எந்தக்காட்டுக்கு
முள்ளுவெட்டப் போறாங்க?

அவர்கள் பேசியது யாருக்குக் கேட்டதோ
இல்லையோ, அழகான அந்த
ஹை ஹீல்ஸ் செருப்புக்குக்
கேட்டு, மௌனமாகச் சிரித்தது.

எழுதியவர் : மனுநீதி (3-Jul-22, 2:34 pm)
சேர்த்தது : மனுநீதி
பார்வை : 55

மேலே