கர்மக் கணக்கு

காசிக்கு சென்று
ஆண்டவன் சன்னதியில்
ஆயிரம் சங்குகள் கொண்டு
அபிஷேகம் செய்தாலும்
அவனவன் கர்மக் கணக்கின்
எண்ணிக்கை மாறாது...!!

நானிலத்தில்
நல்லவர்கள் கஷ்டங்களை அனுபவிப்பதும்
கெட்டவர்கள் சுகங்களை
அனுபவிப்பதும்
கர்மக் கணக்குதான்
என்பதை புரிந்து கொள்...!!

கர்மாவின் பாவத்தை
பரிகாரங்கள் செய்து
கரையினில் கரைத்தாலும்
உன் பாவத்தின் சுமையை
அடுத்தவன்
தலை மீது வைத்து
சுமக்க செய்ய முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (5-Jul-22, 5:54 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 126

மேலே