வீறு கொண்டெழு மனமே

வெற்றியின் மொட்டுக்கள் உன்
வாழ்க்கை எனும்
நந்த வனத்தில்
மலரவில்லையா...!!

இலட்சிய பாதையை
இருண்ட மேகங்கள்
சூழ்ந்து கொண்டு
விட்டதா...!!

வாழ்கையில் தடுக்கி
விழுந்து விட்டோம்
என்று வருந்துகின்றாயா...?

வீறு கொண்டெழு
மனமே வீறுகொண்டெழு...!!

சோதனைகளை கண்டு
துவண்டு விடாதே
அதை சாதனையாக்கிட
தயங்கி விடாதே
உன் பிறப்பின்
நோக்கத்தை மறந்து
விடாதே...!!

உணர்வுகளுக்கும்
உணர்ச்சிகளுக்கும்
அடிமையாகிவிடாதே..
உன் இலட்சியம் நிறைவேறும் வரை
அது ஊமையாகட்டும்...

ஒரு வீரனால் தான்
வீரணை எதிர்க்க
முடியும் கோழையால்
அல்ல....!!

எதிரியின் துப்பாக்கியிற்கு
நீ இரையாகும்
நிலையில்
இருந்தாலும்
சுட்டெரிக்கும்
சூரியனாக இரு...!!

விதி இருந்தால்
தப்பி விடுவோம்
என்ற மூட நம்பிக்கையில்
இருந்தால் செத்து
மடிந்து விடுவாய்...

எழுதியவர் : சதனிகா (4-Jul-22, 8:56 pm)
சேர்த்தது : Sathaniga
பார்வை : 45

மேலே