ஏற்கமாட்டார்கள்

மரியாதைக் குறைவாய்
மற்றவர்களை இகழ்வது
அநாகரீகமட்டுமல்ல
அடுத்தவரை புண்படுத்தும்
இழிநிலை

வழிவழியாய்
வந்த நற்பழக்கங்களை
காற்றில் பறக்கவிட்டு
கண்டிராத பழக்கங்களை
நாம் ஏற்றுக் கொள்ளலாமா

நல்ல பழக்க வழக்கங்களை
நம் பிள்ளைகளுக்குக்
கற்றுக் கொடுக்காதவரை
நாடும், வீடும் மேன்மையுறாது
விடுதலை பெற்ற நாடாய்
வெளி நாட்டவரும் ஏற்கமாட்டார்கள்

எழுதியவர் : (4-Jul-22, 3:52 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே