வாழ்வும் தாழ்வும்

வெளி விருத்தமே (பிறவகை)


நாட்டில் அவரவர் தெய்வம் -- தொழ
நாமும் சுபிட்சமாய் வாழ்ந்தோம் -- வெளி
தேச முகமதி யர்வர. --- நமது
தேச கலாசா ரமுழுதும் -- மதமும்
வாளின் முனையிலே மாற்றினார் -- அன்று
மாறிய இந்து துருக்கர் -- இன்று
ஏனோ எதிரியாய் மாறியவர் - நம்மை
வீணே விரோதியாய் பார்த்தாரே

நேர்சை வெண்பா

தாஜ்மகால் மாற்றி பலமசூதி கட்டியவர்
ராஜபோக மாகவே வாழ்ந்தனர் -- போஜனாய்
வாழ்ந்து குதுப்மினார் கட்டி மதம்மாற்றி
தாழ்ந்தார் பரங்கியரி டம்

வெளிவிருத்தம்

பின்னே வியாபா ரிவெள்ளையன் -- வந்து
பீரங் கியால்மல பாரைசுட் டானே -- நுழைந்த
போர்ச்சு வணிகரும் வெற்றியாம் -- பின்னே
ஊரே கிருத்துவர் ஆனாரே -- பயந்து
கோழை யெனதொழ மேரியை -- விந்தை
ஊழோ மலையா ளருக்கு -- அவரே
மாலிகா பூரால் துருக்கமும் -- பின்னே
மாறி கிருத்துவம் பரங்கியே



( முதலெழுத்து மோனையாக மாச்சீரும் இயற்சீர்கள்
மட்டுமே மூன்று சீர்களாக அமைந்து தனிச்சொல்
பெற்று டீர் ஆர் கான் கோ யே போன்ற
நெடிலோசையில் முடியும் வெண்டளை சீர்கள்
முற்றிலும் காண்க)

.........

எழுதியவர் : பழனி ராஜன் (5-Jul-22, 11:22 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 75

மேலே