சிலையென அசையும் செந்தளிர் மேனி கண்டேன் - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(1, 4 சீர்களில் மோனை)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரலாம்)

தலையினை உயர்த்தி வானம்
..தான்பார்த்துக் கவிதை சொன்னேன்,
கலையெழில் கயல்கள் துள்ளும்
..கவின்கரு விழிகள் ரெண்டு;
கலைந்தாடும் கரிய வண்ணக்
..கார்குழல் புரளும் போழ்து
சிலையென அசையும் உன்றன்
..செந்தளிர் மேனி கண்டேன்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 2:51 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே