நட்பு

எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.
நட்பு என்பது மூன்றேழுத்தில் முடிவதல்ல நம் வாழ்க்கை முடியும் வரை.

வரிகளால் விளக்க முடியாதது வாழ்க்கை,வாழ்க்கையை விளக்குவது நட்பு.

உலகமே உன்னை கைவிடும் போது உன்னோடு இருப்பவன் தான் நண்பன்.
நல்ல நண்பனை அடைய விரும்பினால் நீயும் நல்லவனாக இருக்க வேண்டும்.
நீ என்னிடம் பேசியதை விட எனக்காக பேசியதை தான் உணர்தேன் நமக்கான நட்பை.


முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது எங்கிருந்தோ வந்து இணைந்த நட்பே!
நட்பை விலைக்கு வாங்கவே முடியாது தகுதியானவர்க்கு இலவசமாகவே வழங்கப்படுகிறது
காதல் இல்லைனா வாழ்க்கை தான் பிடிக்காது ஆனால் நண்பன் இல்லைனா வாழவே பிடிக்காது..

உப்பு இருந்தால் தான் உணவு சுவைக்கும் அதுபோல நட்பு இருந்தால் தான் வாழ்க்கை சுவைக்கும்
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும் அதை உபயோகித்து கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு!

எழுதியவர் : சதனிகா (6-Jul-22, 12:03 pm)
சேர்த்தது : Sathaniga
Tanglish : natpu
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே