வெல்லும்வகை சொல்வீர் விரைந்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சிலையெழுந்து வந்தாற்போல் சீர்மிகுந்த பெண்ணை
அலங்கரிக்கும் வித்தைதனை ஆய்ந்து - நிலையறிந்து
சொல்லிடின் நெஞ்சமதில் சொந்தமெனக் கொள்ளுவேன்
வெல்லு(ம்)வகை சொல்வீர் விரைந்து!
– வ.க.கன்னியப்பன்