திருட்டொன்று செய்திட நாளும் யோசிப்பான்

திருவாசகத்தை திருப்பி தினமும் படிப்பான்
திருட்டொன்று செய்திட நாளும் யோசிப்பான்
திருட்டு உருட்டு புரட்டில் திளைப்பான்
திருந்துவ தெந்நாளோ திருநீற்றுப் பெருமானே

----கலிவிருத்தம்

திருவாச கத்தைத் திருப்பிப் படிப்பான்
திருட்டொன்று செய்திட நாளும்யோ சிப்பான்
திருட்டுருட் டன்திருநீற் றுப்பெரு மானே
திருந்துவ தெந்தநா ளோ

----ஒருவிகற்ப இன்னிசை வெண்பாவாக

திருவாசகம் தினமும் படிப்பான்
திருடவே நாளும் யோசிப்பான்
திருநீற்றுப் பெருமானே திருடன்
திருந்துவது எந்த நாளோ !

---வஞ்சி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jul-22, 3:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 10

மேலே