உயிரின் ஓசை

உயிரின் ஓசையைத் தேடி
உடைந்து உருகுதே மனம்,

வலியாது பிரிந்த தருணம்
புரியாது வலிக்கச் செய்கிறது,
தெரியாது இருந்த நேசம்
அறியாது அழச் செய்கிறது,

நில்லாது சுழன்ற நாழிகைகள்
செல்லாது நிலைக்கச் செய்கிறது,
சேர்ந்து திரிந்த பொழுதுகள்
சோர்ந்து திரியச் செய்கிறது,

அர்த்தமற்ற பேச்சுகளின் அர்த்தம்
இப்போது உணரச் செய்கிறது,
செல்லச் சண்டைகளின் நினைவுகள்
மெல்லமாய் நகைக்க செய்கிறது,

விட்டுப் பிரிந்து சென்ற அன்பினால்
விடாது தொடர்கிறது ஏக்கம்...

எழுதியவர் : இ.பொன்ராஜ் (8-Jul-22, 6:04 pm)
சேர்த்தது : இ பொன்ராஜ்
Tanglish : uyeerin oosai
பார்வை : 84

மேலே