கடப்பம் வித்து - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
கடப்பம் விதைக்குக் கடிவிஷமும் உண்டோ
தொடுப்புமண்டை நீருந் தொலையும் - இடக்கான
வாத வகையொழியும் மந்தங்கள் ஏகிவிடுங்
கீதமொழி மாதே கிளத்து
- பதார்த்த குண சிந்தாமணி
இதனால் விடக்கடி, தலை நோய், வாத நோய், அக்கினிமாந்தம் ஆகியவை நீங்கும்