மீண்டும் மலருமா தேசம்

மீண்டும் மலருமா தேசம்
***************************
எதிர்பார்ப்புகளில் வைத்த நம்பிக்கை உதிர்ந்து
ஏமாற்றச் சருகுகளாய் பறக்கும் வாழ்வில்
தேடல்களை ஊன்றுகோலாய்ப் பற்றிய வண்ணம்
பாதைகள் இன்றியே பயணங்கள் செல்கிறோம்
*
நீளும் வரிசை போதிகளின் அடியில்
நின்று பரிதாப தவம் புரிந்தே
அரிசி வரம் கேட்கும் ஏழைகளும்
முனிவராய் மாறிப் போனாரே நாட்டில்.
*
வேர்களே கைவிட்ட விருட்சமாய் இன்று
இலையுதிர்த்து நிற்கும் தேசக் கிளையில்
பறவைகளாய் அமர்ந்து வாடும் மக்களுக்காய்
மீண்டும் மலருமா மறுமலர்ச்சிப் பூ?
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (11-Jul-22, 2:27 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 67

சிறந்த கவிதைகள்

மேலே