நடிகர் திலகம்

நடிகர்திலகம் சிவாஜிகணேசன் ..
🌺🌺🌺🌺🌺🌺🌺

திரைவானில் மறையாத துருவத்து மீனா /
திரைகடலின் அப்பாலும் புகழ்வென்ற தீரா /

பாலகனாய் நாடகத்தில் வேடமிட்ட நீயே/
காலம்வர பராசக்தியில் கர்ச்சித்தாய்த் தீயாய்!

நடிப்பினிலே சிறப்பாநின் நடையினிலே துடிப்பா /
படிப்படியாய் மரியாதை முதலில்வரச் சிரிப்பா !

உடலுறுப்பு ஓவ்வொன்றும் நடித்திடுமே சும்மா/
நடனமோடு வசனமெலாம் தூள்பரத்தும் அம்மா!!

வெள்ளித்திரைக் கேடயங்கள் பாதங்களில் வீழ
கள்ளமில்லாச் சிரிப்போடே கணேசாநீ வாழ்க!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (12-Jul-22, 8:20 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 101

மேலே