பொன்னை நிகர்த்த புதுமலரே - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(1, 3 சீர்களில் மோனை)

உன்னை நினைக்கையில் உள்ளம் உருகுதே
என்மன ஊஞ்சலில் எண்ணங்கள் – பொன்னை
நிகர்த்த புதுமலரே! நேரிலுனைக் காண
அகந்தனில் ஆசைமிக ஆங்கு!

- வ.க.கன்னியப்பன்

(1, 3 சீர்களில் மோனை வருவது பொழிப்பு மோனை)

உ விற்கு உ ஊ ஒ ஓ மோனை

எ விற்கு இ ஈ எ ஏ மோனை

நி க்கு நி நீ நெ நே மோனை

அ விற்கு அ ஆ ஐ ஔ மோனை

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-22, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே