இல்லாள் மனமறிந்தே இனிது புரிதலுடன் - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
(மா காய் மா காய்)

இல்லாள் மனமறிந்தே இனிது புரிதலுடன்
வெல்லும் வழியறிந்து விரைந்து செயலாற்றிச்
சொல்லும் வகையினிலே சொல்லித் தெளிவிப்பீர்
அல்லல் நீங்கிவிடும் அறிந்து செய்குவீரே!

- வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:
கலிவிருத்தம்
(மா காய் மா காய்)

கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென்
றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த
வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த
நல்லா னமையாள்வா னல்ல நகரானே 1

- 085 திருநல்லம், முதல் திருமுறை, சம்பந்தர் தேவாரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-22, 12:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே