கல்லாது ஒருவன் நல்லறி வாள ரிடைப்புக்கு மெல்ல இருப்பினும் நாயிருந் தற்றே – நாலடியார் 254
நேரிசை வெண்பா
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாள ரிடைப்புக்கு - மெல்ல
இருப்பினும் நாயிருந் தற்றே, இராஅ(து)
உரைப்பினும் நாய்குரைத் தற்று 254
- அறிவின்மை, நாலடியார்
பொருளுரை:
கல்வியறிவு பெறாமல் வளர்ந்து விட்ட ஒருவன் உலகத்தில் உயர்ந்த அறிவாளிகளின் அவையில் நுழைந்து இருக்குமிடம் தெரியாமல் இருந்தாலும், அந்நிலை ஒரு நாய் இருந்தாற் போன்ற தன்மையை உடையதாகும்;
அவ்வாறு அடக்கமாக இராமல் ஏதானும் ஒன்று வாய் திறந்து கூறினும் அது நாய் குரைத்தாற் போன்ற தன்மை உடையதாகும்.
கருத்து:
கல்வியறிவு பெறாதோர் நாயின் நிலையில் வைத்துக் கருதப்பட்டார்.
விளக்கம்:
நீண்ட என்றார், ஓரறிவுயிர் போற் கருதி அதன் இழிவு தோன்ற. அறிவாளரின் அறிவொளிமுன் தன் வலியடங்கி அடக்கமுடையான் போல் திகைத்திருத்தலின், ‘மெல்ல இருப்பினும்' என்றார்;
நாய் என்றது, இழிவுகருதி