நீ பேசாத இரவுகள் கசந்தது 555

***நீ பேசாத இரவுகள் கசந்தது 555 ***
நினைவானவளே...
நீ என்னை பார்த்து செல்லும்
போதெல்லாம் மனம் பூவாய் பூக்கும்...
நாம் சேர்ந்திருந்த
நாட்கள் எல்லாம்...
கனவாக போகும்
என்று நினைக்கவில்லை...
உன் பிரிவும் மௌனமும்
என்னை கலங்க வைப்பது போல...
என் பிரிவும் உன்னை
ஏங்க வைக்கும்...
உனக்கு நான் பாரமாக
இருந்தேனோ தெரியவில்லை...
இன்று நான் யாருக்கும் பாரமில்லை
என்பது சந்தோசம்தான்...
நீ பேசாத இரவுகள்
எனக்கு கசந்தது என்று...
நான் யாரிடம் உனக்கு
தூது சொல்வேன்...
என்னை நீ பிரிந்த
காரணம் சொல்வாயோ...
நான்
இன்னும் வாழ்வதற்கு...
என் காதலை நினைத்து
வாழ ஆசை எனக்கு...
நாம் பரிமாறிக்கொண்ட
பரிசுகள் எல்லாம் இருக்கிறது...
உன்
இதயத்தை தவிர...
கொஞ்ச கொஞ்சமாக
என்னை வதைக்கிறது...
நாம் பழகிய நாட்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து உன்னால்.....
***முதல்பூ.பெ.மணி.....***