உனக்குள் மலராத காதல் மொட்டு 555

***உனக்குள் மலராத காதல் மொட்டு 555 ***
என்னுயிரே...
என்
உணர்வுகளை கொன்றுவிட்டு...
உள்ளத்திற்கு
விருந்தளிக்க ஆசையில்லை...
நீ என்னை
பார்க்கும் போதெல்லாம்...
பொய் கோபம் கொள்கிறாயா
என்னை வெறுக்கிறாயா...
நேரில் உன்னை தினமும்
காணமுடியாவிட்டாலும்...
உள்ளத்தில் உன்னை
நினைத்து பார்க்கிறேன்...
உனக்குள்
மலராத காதல் மொட்டு...
எப்போது மலருமென்று தினம்
தினம் காத்திருக்கிறேன்...
உனக்குள் இருக்குமா இல்லையா
தெரியாமலே உனக்காக நான்...
என்னில் இருக்கும்
கேள்விகளுக்கு...
எப்போது நீ
விடையாய் வருவாய்...
இத்தனை நாளாய்
உனக்கு தயக்கம் ஏனோ...
முகம் பார்த்து சொன்ன
என் காதலுக்கு...
நீ மண்
பார்த்தாவது சொல்லிவிடு...
என்மீது காதல்
மலரவில்லையென்று...
மலர்களை ரசிக்க
தெரிந்த உனக்கு...
மலரின் வாசனையை
உணர தெரியவில்லை...
என் காதலும் உனக்கு
அப்படித்தானோ...
என் ப்ரியமானவளே.....
***முதல்பூ.பெ.மணி.....***