ஆசைக்கு ஆளாகாதே
இட்டமெனப் போதைதனில்
இப்பொழுதைத் தேடியவர்
எட்டிநடக் காமனிதர் நேரா காரே
எட்டியெனப் போகுமிவர்
எட்டடியைத் தேடுவதில்
எட்டவுளப் பாதைகளுக் காகா தாரே
நட்டுவிடற் காருமிலர்
இட்டமுறத் தேனுறிவர்
நட்பறியக் தானிதயக் கூடோ ரேடே
நட்டமறத் தேடுவதில்
நட்புறவைப் போலணைவர்
நட்டமதற் காகவுளத் தாலே தேளே
பட்டமரத் தோடுகுயில்
இட்டமுறப் பாடுகையில்
பட்டசுகத் தீடிணையைப் போலே ஏதோ
பட்டவுனக் காறுதலில்
பக்குவமுற் றோதுமிதழ்
பட்டபடிப் பாயமையக் காணா யோநீ
கட்டழகைப் பேணியவர்
கட்டுடலைக் காலனவர்
கட்டியிழுத் தோடுவதைப் பாரா நீயே
கெட்டுவிடப் போகுதுடல்
விட்டுவிடப் போகுதுயிர்
கெட்டமனத் தாசையதற் -
காளா காதே
**