அவள்

மலர்களின் அழகை எல்லாம் தாமரை
மலரின் மொட்டில் பூட்டி வைத்தான்
இறைவன் அதை ஆதவன் உதயத்தில்
தன்பொற் கிரணங்களால் தீண்ட மலரவைத்து
தாமரை ஏன் பூவின் அரசி
என்பதனையும் உணரவைத்தான் அதுபோல்
பெண்ணே உனழகை எல்லாம் உந்தன்
விழிகளில் பூட்டி வைத்தானோ பிரமனும்
அதன் அழகை மூடி திறக்கும்
இமை இரண்டில் திறந்து வைத்தானோ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Jul-22, 9:32 am)
Tanglish : aval
பார்வை : 78

மேலே