பெண் வர்ணனை கவிதை

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃

பெண்ணே !
பூங்காவிற்கு நீ சென்றால்
பூக்களும்
ஆட்டோகிராப் கேட்குமடி...!வெட்டவெளியில்
நீ நடந்தால்
வெண்மேகமும்
மழை பெய்யுமடி...!

எட்டி
நீ நடந்தால்
இளையராஜா இசையும்
தோற்குமடி.....!
நீ
துள்ளி ஓடினால்
புள்ளி மானும் அசிங்கமடி....!

கூந்தலை நீ
அவிழ்த்துவிட்டால்
கானகமயிலும் ஆடுமடி....!
கனிதல் பிரித்து
நீ பேசினால்
கருங்குயில்
உன்னை தேடுமடி....

அன்பே !
உன் பார்வை பட்டால்
கல்லும் கரையுமடி...
அமுதே |
உன் பாதம் பட்டால்
கடல் நீரும் இனிக்குமடி....!

மனம்விட்டு
நீ சிரித்தால்
மழலையின் அழகையும்...!
வெல்லுமடி....
மழையில்
நீ நனைந்தால்
மழைத்துளியும்
காதல் கொள்ளும்படி .....!

உன் இமைகள்
அசைந்தால்
புதுத்தென்றல்
புறப்படுமடி.....!
உன் நிழல்கள் விழுந்தால்
பூமியும்
புத்துணர்ச்சி கொள்ளும்படி....!

சிலைக்கு
அருகில்
நீ நின்றால்
அதற்கும் சிலிர்க்குமடி...|
சித்திரத்தை
நீ தொட்டு ரசித்தால்
அதுவும் மயங்குமடி....

அலங்கரித்து
நீ வந்தால்
அம்மனே!
எழுந்து நிற்குமடி...
தப்பித்தவறி
பூமிக்கு வந்தால்
பிரம்மனே
யஉன்னைக் கண்டு
பிரமித்து போவானடி....!

*கவிதை ரசிகன் குமரேசன்*

💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (17-Jul-22, 10:05 pm)
பார்வை : 145

மேலே