பசி

பசி

அங்கங்கள் யாவும் தோய்ந்து படுத்திருக்க
அதில் உயிர்நாடி மட்டும் துடித்திருக்க

அந்த மகவைக் கண்டு மனம் வருந்திட
அதற்கு நலமளிக்கும் சுவை உணவளித்திட

அன்புடன் கருணை வார்த்தைகள் உரைத்திட
அந்த மகவின் முகம் சிறிது மலரக் கண்டோம்

அவள் கண்ணில் ஏக்கம் தெரிந்ததை உணர்தோம்
அதன் காரணம் எதுவென அறியாமல் வியந்தோம்

அம்மாவைத் தேடுகிறதோ என ஊகித்தோம்
அதற்கு ஆறுதல் அளிக்க அருகே சென்றோம்

உணவை வாயில் ஊட்டிய பின்னும் அவ்வேக்கம்
அவளை உறங்க விடாமல் செய்வதை அறிந்தோம்

அதன் ஏக்கம் வயிற்று பசி அல்ல அறிவு பசி எனக் கண்டு
அறிந்தவுடன் மனதில் பொங்கிய இன்ப உணர்ச்சியில்

அவளிடம் சென்று மகளே வா என அழைத்து அணைத்து
அவளைப் பள்ளியில் சேர்க்க மகிழ்வுடனே விரைந்தோம்

எழுதியவர் : கே என் ராம் (18-Jul-22, 3:19 am)
சேர்த்தது : கே என் ராம்
Tanglish : pasi
பார்வை : 35

மேலே