ஞானம்நீ எந்தனுக்கு நல்கு - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
(ஏந்திசைச் செப்பலோசை)
தித்திக்கும் தெள்ளமுதே தீந்தமிழே பக்திக்கு
வித்தாகும் நற்பொன்னே வெண்மணியே! - எத்திக்கும்
ஞானவடி வானவளே நாமகளே தேன்மொழியே!
ஞானம்நீ எந்தனுக்கு நல்கு!
- வ.க.கன்னியப்பன்