அண்ணல் சிவனைநீ போற்று
கண்மூன் றுடைநாதன் கங்கைச் சடையனவன்
பெண்மானை பாதியுடல் தன்னில்அன் பில்வைத்தான்
விண்ணவர்எல் லாமமுத ருந்தவிடம் தான்உண்டான்
அண்ணல் சிவனைநீ போற்று !
-விண்ணவர்எல் லாமமுத ருந்த - விண்ணவர் எல்லாம் அமுது அருந்த....
பாற்கடல் கடையப்பட்ட போது அமுதும் நஞ்சும் வந்தது
திருமாலின் வேண்டுகோள் படி முதலில் வந்த ஆலகால விடம் என்ற
நச்சினை சிவன் அருந்தினார் . பின் வந்த அமுதை திருமால் வழங்க
தேவர்கள் அருந்தினார்
--- வாலி ஒரு பாடலில் "வானிலுள்ள தேவர்களை வாழ வைக்க விஷம் குடித்தான்
நாட்டிலுள்ள விஷத்தையெல்லாம் நான் குடிக்க வைத்துவிட்டான் " என்று அழகாகச் சொல்லுவார் "
மற்றவருக்காக தான் நச்சருந்திய அன்பு அண்ணலை போற்று என்பதே
இந்த ஒருவிகற்ப வெண்பாவின் பொருள்