வரிக்கடுக்காய் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
மிடுக்காக்குந் தேகத்தை விந்துவையுண் டாக்குஞ்
சடக்கெனவே யுண்டியையுட் சாடுந் - துடுக்கான
வாதபித்த ஐயகற்றும் வன்னியொடு நவ்விதருஞ்
சாதி வரிக்கடுக்காய் தான்
- பதார்த்த குண சிந்தாமணி
வரிக்கடுக்காய் வாத பித்த தோடங்களை அகற்றி தேகத்திற்கு மிடுக்கினைக் கொடுக்கும் . தாதுப் பெருக்கத்தையும், அழகையும் தரும். அதிவிரைவில் உணவை உட்செலுத்தும் .