செங்கடுக்காய் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சுத்தியொடு புத்தி சுகமும் புகழுமுண்டாம்
மெத்தவொளிர் பொன்னிறமாம் மேனியெல்லாம் - சுத்தமாம்
வங்கடுத்த ஈளைபல வன்காச மும்மலமுஞ்
செங்கடுக்காய்க் கில்லையெனத் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

செங்கடுக்காய் சிலேட்டுமம், கோழை, இருமல், மலக்கட்டு இவற்றைப் போக்கி அறிவு, இன்பம், புகழ், உடற்கு நன்னிறம் இவற்றை அளிக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-22, 2:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே