சேதுநாட்டுத் தென்திருமருதூர் தல புராணம் - ஆசிரிய விருத்தம்

அவையடக்கம்
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 5 / மா தேமா)
(1, 4 சீர்களில் மோனை)

வான்பொலிந்த மழையசுத்தஞ் சுத்தமாகி
..வதிந்தநில மெவ்வயினும் வழங்குங் கஞ்சத்
தேன்பொலிந்த புண்ணியமா நதிக்கணெய்தித்
..தீர்த்தமெனப் பேர்விளங்கிச் செவ்வி தாமாற்
கான்பொலிந்த வேணியெம்மான் ற(ன்)பாலன்பால்
..கற்றவர்மற் றவரென்னுங் கருணை தோன்றிற்
றான்பொலிந்த புகழ்பாடத் தருவனிந்தத்
..தமிழறிஞர்க் (கி)யற்பாவாய்த் தழைக்கு மாதோ 1

- சிறுகம்பையூர் சிற்றம்பலக் கவிராயர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-22, 10:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே