உசாத்துணையும் ஆகா வெறுத்துநீ உண்டல் கடன் – அறநெறிச்சாரம் 136
நேரிசை வெண்பா
புலன்கள் பொருட்டாகப் பொச்சாந்து நெஞ்சே!
சலங்களைச் சாரா ஒழுகல் - புலங்கள்
ஒறுக்கும் பருவத்(து) உசாத்துணையும் ஆகா
வெறுத்துநீ உண்டல் கடன் 136
அறநெறிச்சாரம்
பொருளுரை:
மனமே! மேல் துன்பம் வரும் என்பதை மறந்து ஐம்பொறிகளாலும் நுகரப்படும் இன்பத்தின் பொருட்டு தீவினைகளை மேற்கொண்டு ஒழுகுவது அத் தீவினைகளை உன்னை ஒறுக்கும்பொழுது அப் பொறிகளைந்தும் உனக்கு மதி கூறுவதற்கேற்ற துணையுமாகா;
ஆதலால், புலனுகர்ச்சி கருதி மீதூணை விரும்பாது மறுத்துண்டல் கடனாகும்.