வயிறுமோர் பெற்றியால் ஆர்த்திப் பயன் கொள்வதே கற்றறிந்த மாந்தர் கடன் – அறநெறிச்சாரம் 135

நேரிசை வெண்பா

வயிறு நிறைக்குமேல வாவின்மிக் கூறிச்
செயிரிடைப்பா டெய்துமாஞ் சீவன் - வயிறுமோர்
பெற்றியால் ஆர்த்திப் பெரும்பயன் கொள்வதே
கற்றறிந்த மாந்தர் கடன் 135

அறநெறிச்சாரம்

பொருளுரை:

உணவால் வயிறு நிறைக்கப்படுமாயின் உயிர் மிக்கு அவாவினை யடைந்து தீவினைகளிடைக் கேட்டினை யடையும்; ஆதலால், வயிற்றையும் கரணங்கள் தொழிற்கு உரியன ஆகுமாறு சிறிது உண்பித்து இவ்வுடம்பால் இனிப் பிறவாமைக்கு ஏதுவாகிய காரியங்களைச் செய்து பெரும்பயன் கொள்வதே அறிவு நூல்களைக் கற்றுத் தெளிந்த பெரியோர் கடமையாகும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-22, 3:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 22

மேலே