தேனின் சுவையாய்த் திகழும் இளமை - கலிவிருத்தம்

கலிவிருத்தம்
[மா + மா + மா + மா]

தேனின் சுவையாய்த் திகழும் இளமை;
வானில் நிலவின் வகையாய் உலவும்!
கானம் எனவே கனிவாய் மலரும்
ஞானம் இதுவே நவில்வேன் இனிதே!

- வ.க.கன்னியப்பன்

எ.காட்டு:

கலிவிருத்தம்
[மா + மா + மா + மா]

நீரும் மலரும் நிலவும் சடைமேல்
ஊரும் மரவும் உடையான் இடமாம்
வாரும் மருவி மணிபொன் கொழித்துச்
சேருந் நறையூர்ச் சித்தீச் சரமே! 1

- 093 திருநறையூர்ச் சித்தீச்சரம்,
ஏழாம் திருமுறை, சுந்தரர் தேவாரம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jul-22, 9:14 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே