வாலைக் குமரியே வந்தெனை அணைப்பாய் - நிலைமண்டில ஆசிரியப்பா
நிலைமண்டில ஆசிரியப்பா
பாலை வனத்துப் படகில் பைந்தமிழ்ச்
சோலைக் கதிர்போல் சுதந்திரமாய் நின்றேன்;
வாலைக் குமரியே வந்தெனை அணைப்பாய்!
பாட்டைப் பாடிப் பாங்குடன் வந்தேன்
5 கேட்க இன்பமோ கேளிரே சொல்வீர்!
சுந்தரத் தமிழில் சொக்கி யெனைமறந்தேன்;
7 இந்திர லோகத்தில் இருப்பதா யுணர்ந்தேனே!
– வ.க.கன்னியப்பன்