கற்கறித்துக் பற்கழல்நாய் அன்ன துடைத்து – அறநெறிச்சாரம் 138

நேரிசை வெண்பா

ஒறுக்கிலேன் ஊர்பசை என்கண் பிறரை
ஒறுக்கிற்பேன் என்றுரைப்பை யாகில் - கறுத்தெறிந்த
கற்கறித்துக் கற்கொண் டெறிந்தாரைக் காய்கல்லாப்
பற்கழல்நாய் அன்ன துடைத்து. 138

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

என்னை ஊர்ந்து செலுத்துகின்ற அவாவினையடக்கேன், நான் கருதிய பொருளையடைதற்கு இடையூறு செய்கின்றவர்களை அடக்குவேன் என்று நெஞ்சே! நீ சொல்வாயாயின் கல்லால் தன்னை எறிந்தவர்களை வெகுண்டு கடியாமல் அவர்களால் வெகுண்டு எறியப்பட்ட கல்லைக் கடித்து பல்லை இழக்கின்ற நாயினது செயலை ஒக்கும் உனது செயல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-22, 6:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 153

மேலே