ஏரிக் கரையின் எழில்மிகு முல்லைநீ - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஏரிக் கரையின் எழில்மிகு முல்லைநீ!
வாரியுன் புன்னகை வாட்டமின்றி - நேரிலே
பாரிமன்ன னைப்போலப் பாசமொடு நல்கினாய்!
தேரினை நான்தந்தேன் தேர்ந்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jul-22, 10:23 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

மேலே