செவ்வள்ளிக் கொடி - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

செவ்வள்ளி யின்கொடிக்குச் சேடித்த குஷ்டமொடு
கவ்வு குறைநோய் கரப்பானும் - இவ்வுலகில்
மானே குடல்வாதம் வல்ல படுவனுடன்
ஆனபரு மூலமும்போம் ஆய்

- பதார்த்த குண சிந்தாமணி

இதற்கு குட்டம், பெருவியாதி, கடுவன், குடலண்டம், நகம், குதிகால்களில் உண்டாகும் கொப்புளம் இவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-22, 3:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

மேலே