செவ்வியம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சூலை யருசிசன்னி தொல்லிருமல் ஈளைபித்தம்
மேலைக் குரற்கம்மல் வெங்களநோய் - மூலசுரம்
கவ்வியங்கத் தேறு கனதா வரவிஷமுஞ்
செவ்வியங் கொள்ளவிடுந் தேர்

- பதார்த்த குண சிந்தாமணி

செவ்வியத்தால் குத்தல், அரோசகம், சன்னி, சுரம், நீடித்த காசம், கோழை, பித்தம், சுரசாதம், தொண்டை நோய், பழஞ்சுரம், எலும்பைப் பற்றிய தாவரவிடம் ஆகியவை நீங்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Jul-22, 3:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே