கிரந்தி தகரம் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
சீறுபித்த நோயுந் திரைபெரிதல் போலுமெறிந்
தேறுஞ் சுவாசநோய் என்பதுவும் - வீறிப்
பரந்தசரக் காப்புதமும் பண்ணப் புகுங்காற்
கிரந்திதக ரத்தாற் கெடும்
- பதார்த்த குண சிந்தாமணி
பித்த நோய், சுவாசநோய், சர்க்கராப்புதம் எனப்படும் இரணக்கிரந்தி இவை கிரந்தி தகரத்தால் ஒழியும்