தேடல்
நேற்று ஒன்றை
தேடிக் கொண்டிருந்தேன்..
இன்று வேறொன்றை
நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறேன்..
நேற்றைய
தேடல்
இன்றைக்கு
இல்லை..
நாள் புதிது,
நானும் புதிது,
தேடலும் புதிது,
எதை நோக்கி
நான்
ஓடிக் கொண்டிருக்கிறேன்
எந்த நிறுத்தத்தில்
நான்
இறங்கப் போகிறேன்.,
எதில் என் மனம் நிறைவடையும்
எப்போது
என் கால்கள் ஓய்வு கொள்ளும்
விடையையும்
நான்..தேடிக் தான்
பார்க்க வேண்டும் போல...
எங்கும் நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும்
நதிகளுக்கு ஓய்வு எப்போது
கடலில் கலந்த பின்பா?
அன்புடன் ஆர்கே..